தலசீமியா பற்றிய ஓர் சிறு பார்வை
தலசீமியா என்பது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு வரக்கூடிய ஒரு மரபணு நோய் ஆகும். இது தவிர்க்க கூடிய ஒரு நோய். தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கை இயற்கையாகவே குறைவாக இருக்கும். தாய் மற்றும் தந்தையிடம் இருந்து தலா ஒரு குறைபாடு உள்ள ஜீன்கள் குழந்தைக்கு கடத்தப்படுவதால் இந்த மரபணு குறைபாடு ஏற்படுகிறது. பெற்றோர் இருவரும் கேரியர்களாக இல்லாவிட்டால், குழந்தைக்கு தலசீமியா நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.
பெற்றோர்களுக்கு எந்த மரபணு பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, ஒரு நபருக்கு α அல்லது β தலசீமியா அல்லது ஹீமோகுளோபின் ஈ β தலசீமியா போன்ற பிற ஹீமோகுளோபினோபதிகள் இருக்கலாம். இதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் இரத்தமாற்றம் சார்ந்த தலசீமியா நோயாளிகள். (Transfusion Dependent Thalassemia). சிலருக்கு எப்போதாவது ரத்த மாற்றம் தேவைப்படலாம்.
தொடர்ச்சியான அல்லது இடைப்பட்ட இரத்த மாற்று சிகிச்சை பெரும் பொழுது உடலில் இரும்புச் சத்தின் அளவு அதிகரிப்பதுடன் இதயம் மற்றும் பிற உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். எனவே உடலில் இருந்து அதிகப்படியான இரும்புச்சத்தை அகற்ற இரும்பு செலேஷன் சிகிச்சைக்காக 12 மணி நேரம் தொடர்ந்து தோலடி உட்செலுத்துதல் (subcutaneous infusion) அல்லது வாய்வழி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் Iron Chelating Agents-ஐ செலுத்துவதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தின் அளவை சீர்செய்ய முடியும்.
இந்தியாவில் முதல் முறையாக விடைட்டன் நிறுவனம (vTitan Corp.) Accuflow Thala Pump எனும் பிரத்யேக syringe pump-ஐ தலசீமியா நோயாளிகளுக்காக கண்டறிந்துள்ளது. இதனை பயன்படுத்தி தலசீமியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்றாட வேலைகளை செய்து கொண்டு சாதாரண வாழ்க்கையினை தொடர முடியும். இந்த பம்ப்பினை உடலின் இடுப்பு பகுதியில் இணைத்து கட்டிக்கொண்டு தொடர் சிகிச்சையினை பெற முடியும். இதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான இரும்புச் சத்தை சீராக்கி மேலும் இரத்த மாற்று சிகிச்சையினை பெற வழிவகை செய்கிறது. இது உபயோகிப்பதற்கு மிகவும் எளியதாகவும், சிறப்பு அம்சங்களாக எச்சரிக்கை ஒலி (alarm), rechargeable battery போன்றவைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலசீமியா நோயாளிகளின் வாழ்வாதாரத்திற்கு இந்த Accuflow Thala Pump ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட தலசீமியா நோயாளிகளுக்கு இந்த பம்ப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு: https://www.vtitan.com/thalassemia-syringepump